அசைவ உணவுகளில் நாம் அனைவரும் அதிகம்
விரும்புவது கோழிக்கறி சமையல். அதிலும் வேலை நிமித்தம் வீட்டைவிட்டு வெளியே வாழும்
ஆண்களுக்கு, தாங்களே அசைவம் சமைக்க வேண்டும் என்றால், உடனே கை கொடுப்பது சிக்கன்
மட்டுமே. சுத்தம் செய்வது சுலபம். சமைப்பது எளிது. ருசியோ அலாதி. இதை போல
வெளிநாடுகளில் சமைத்து உண்ணும் ஆண்களுக்காகவே, இன்று ஒரு சுவையான த்ரீ-இன்-ஒன்
சிக்கன் சைடு டிஷ் கற்று தருகிறேன். நீங்க ரெடியா ?
செய்முறை விளக்கம் :
1) கோழித் துண்டுகளை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய்
தூள், கரம் மசாலா தூள், உப்பு அனைத்தையும் சேர்க்கவும். கூடவே சிறிது இஞ்சி பூண்டு
பசையை சேர்த்துக் கொள்ளவும்.( படம்-அ )
படம் அ |
2) இதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய
வெங்காயம் சேர்த்து நன்கு பிசிறி வைக்கவும். ( படம்–ஆ )
படம் ஆ |
3) அடுப்பில் அடி கனமான வாணலியில், எண்ணெயைச்
சுடவைத்து கோழிக் கலவையை சேர்த்து கிளரவும். ( படம்-இ )
படம் இ |
4) 5 நிமிடம் எண்ணையிலேயே நன்கு வதக்கவும்.
பிறகு அரை கப் தண்ணீர் தெளித்து, மூடி போட்டு வேக விடவும். ( படம்-ஈ )
படம் ஈ |
5) நன்கு
வெந்ததும், மீதி இருக்கும் நீரை குறைந்த தணலில் வைத்து சிறிது நேரம் வேக விட்டு ( படம்-உ
) வில் உள்ள பதம் வந்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும். இது சப்பாத்தி, தோசை,
பரோட்டாவுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும். இது ஒரு வகை.
படம் உ |
6) வகை இரண்டு - இதே கோழியை சாதத்துடன் சாப்பிட
விருப்பப் பட்டால், மீதம் உள்ள மசாலா கலந்த நீரை காய விடவும். (படம்-ஊ) வில் உள்ள
பதத்தில் சுருளக் கிளறி, சுடச்சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், ஆஹா !
படம் ஊ |
7) வகை மூன்று – இதை மேலும் சிவக்க வறுக்க
விரும்பினால், குறைந்த தணலில் வைத்து,
மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி வறுக்க விடவும். சாம்பார்
சாதம், ரசம் சதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட்டால் தூள் !
சிக்கன் வறுவல் |
Post a Comment