சென்ற வாரம், பழமொழி ஒன்று காலத்திற்கு ஏற்றார்
போல எவ்வாறு மருவி விட்டது என்பதை படித்து ரசித்தோம். அதை போலவே இப்பொழுதும் ஒரு
பழமொழியை அலசி ஆராயலாமா ?
“ யானைக்கு ஒரு
காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் “
இன்றைய பொருள் :
யானை போன்ற பலம்
பொருந்தியவர்கள் ஒரு சில காலக் கட்டங்களில் வெற்றி பெற்றால், பூனையை
போன்ற பலம் குறைந்தவர்களும் தகுந்த நேரம்
வரும் போது வெற்றி பெறுவார்கள். அதாவது, வலியோர்களுக்கு ஒரு காலம் வந்தால்,
எளியோர்களுக்கும் ஒரு காலம் வரும் என்பதே கருத்து. ஆனால், இது உண்மையான பொருள்
இல்லை. இந்தப் பழமொழி உருமாறி இருக்கிறது
உண்மையான பொருள்
:
‘ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்’ என்பதே உண்மையான பழமொழி.
‘ஆ’ என்றால் ஆவினம். ஆவினம் என்றால் பசுக்கூட்டம்
என்று பொருள். பசுவின் பாலில் இருந்து கிடைக்கக்கூடிய நெய்யை இளமைக்
காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பொலிவு ஏற்படும்.
‘பூ’ நெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேன். இந்தத் தேனை முதுமைக் காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு எந்தவிதமான தீங்குகளும் ஏற்படாது. இந்த கருத்தை உணர்த்தவே ' ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்' என்று கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆக, இப்பழமொழியில் யானைக்கும், பூனைக்கும் சம்பந்தமில்லை என்பதையும் உணர்க.
இதனை வேறு மாதிரியும் நான் படித்திருக்கேன்...
ReplyDeleteஆனை -- ஆ நெய் - பசுவின் நெய் (as U said)
பூனை -- பூ நெய் - தேன் (as U said)
ஆனைக்கு ஒரு காலம் வந்தால்... அதாவது, நாம் பசுவின் நெய்யை அதிகமாக உட்கொள்ள நேர்ந்தால், உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் உபாதைகள் வரும்.. அப்போது பூ நெய்யான தேன் (தேன் - மருந்தாகப் பயன்படுத்துவது தமிழ் மருத்துவம்) பயன்படுத்த வேண்டிய காலம் வரும்...
இப்படி... எது உண்மையோ தெரியல..
அருமையான விளக்கம், அருமையான பதிவு, தமிழ் மொழியில் உள்ள ஒரு ஒரு வார்த்தைக்கும் ஒரு பொருள் ஒரு உவமை என்னவென்று சொல்ல என் மொழியை,ஒரே வார்த்தையை பல்வேறு விதமாகவும் வேறு வேறு பொருள் தரும்படி சுவையாக சொல்ல முடியும் என்பது இந்த மொழியின் தனி சிறப்பு அகவே தான் தமிழுக்கும் அமுதென்று பெயர்
ReplyDeleteநம் மொழியில் மறைந்து கொண்டு இருக்கோம் பல சிறப்புகளில் பழமொழியும் ஒன்று..அதை நினைவுப் படுத்திக்கொள்ள தங்கள் வலைத்தளம் வழியாக வகை செய்வதற்கு மிக்க நன்றி...வழக்கம் போல் உங்கள் இந்த பதிவும்...அருமை..மேலும் வளருங்கள் வாழ்த்துக்கள்..
ReplyDelete