புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Saturday, 22 March 2014

கிளிமஞ்சாரோ என்றால் என்ன ?


‘கிளிமஞ்சாரோ மலைக் கனிமஞ்சாரோ யாரோ யாரோ ?’

யாருங்க இந்த கிளிமஞ்சாரோ ? கிளிமஞ்சாரோ என்பது, ஆப்ரிக்க நாட்டில் உள்ள தன்சானியாவில் அமைந்துள்ள பனி பொதிந்த ஒரு உயரமான மலைத் தொடர் ஆகும்.


இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த கீபோ, மாவென்ஸி, மற்றும் ஷிரா என்ற மூன்று ஆக்ரோஷமான எரிமலைகளின் எச்சங்கள் தான், கிளிமஞ்சாரோ மலைத்தொடர். ஷிரா மற்றும் மாவென்ஸி மலைகள் இறந்த எரிமலைகளாக கருதப்படுகின்றன. ஆனால், கீபோ மலையோ உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலை ஆகும். எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் உள்ளது.


இந்த கீபோ மலைத்தொடரில் தான், ஆப்ரிக்காவின் உயரமான சிகரமான உஹுரு உள்ளது. பளபளக்கும் மலை என்று செல்லமாக அழைக்கப் படும் கிளிமஞ்சாரோ மலை, பல்லாயிரக்கணக்கான வனவிலங்குகளின் உறைவிடம் ஆகும். ஒரு எல்லைக்கு அப்பால், மலை ஏறுபவர்களை பேய் பிசாசுகள் கொன்று விடும் என்ற மூட நம்பிக்கை இன்றும் நிலவுவதால், காட்டு வாசிகளும் இந்த மலை ஏற தயங்குகின்றனர், என்பதே மிகவும் ஆச்சர்யமான விஷயம் ! 

ஆனாலும், மனிதர்களின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் கண்டிப்பாக பலன் தரும் அல்லவா ? ஹான்ஸ் மேயர் என்ற ஜெர்மானியரும், ப்ருஷ்ஷேல்லர் என்ற ஆஸ்திரியரும், பல தடைகளைத் தாண்டி, 1889 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கீபோ மலை உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர்.  தற்போது இங்கு மலை ஏறும் துணிகரமான பயிற்சி அளிக்கப் பட்டாலும், மலை ஏறும் போது நேரும் விபத்துகளும், உயிர் பலிகளும் அதிகம் ஆகும். இதற்கு காரணம், கிளிமஞ்சாரோவின் செங்குத்தான மலைப்பாங்கும், வழுக்கும் ஐஸ் பாறைகளும் ஆகும்.  



அதெல்லாம் இருக்கட்டும். கிளிமஞ்சாரோ என்ற பெயரின் காரணம் என்னவென்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆப்ரிக்காவில் வாழும் 'பண்ட்டு' இனத்தவரின் மொழி 'ஸ்வாஹிலி' ஆகும். இந்த மொழியில் ‘கிளிம’ என்றால் மலை என்றும் ‘ஞ்சரோ’ என்றால் உயர்ந்த என்றும் பொருள் படும். அதாவது, கிளிமஞ்சாரோ என்றால், உயர்ந்த மலை என்று பெயர் சூட்டியுள்ளனர். சரிதானே ??  


இந்தப் பதிவின் காணொளியைக் காண : 




2 comments :

  1. பயனுள்ள தகவல்கள், அந்த ஒற்றைக் வரியில் இவ்வளவு செய்திகளா என்று வியந்தேன்,விவரம் அறிந்தேன். மிகவும் நல்ல பணியை செய்துகொண்டு வருகிறீர்கள். மேலும் பல அரியதகவல்களை வழங்குங்கள்,தொடர்ந்து எழுந்துங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Scientifically sound information. Deep thanks

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger