புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Tuesday, 22 April 2014

கூகுளைப் பற்றி கூகிள் செய்தால் ?

நூலகங்களை நாடிச் சென்று, புத்தகங்களை தேடி படித்து, உலக அறிவை பெருக்கிய காலம் மலையேறி விட்டது. பல நூறு நூலகங்கள் ஒரு வினாடி சொடுக்குதலில் நம் கை வசம் வந்து சேர்ந்துவிடும் விந்தை நடக்கும் அளவுக்கு, நம் உலகம் முன்னேறி உள்ளதை கண்டால் வியப்பாய் தான் இருக்கிறது.

நூலகங்களை முன்னோடியாக கொண்டு அதே கருத்தில் உருவாக்கப் பட்ட கூகுள் என்ற தேடல் பொறி இல்லாமல் இணையத்தில் உலாவுவது நம்மால் இயலாத காரியம் என்றாகிவிட்டது. வாருங்கள் நண்பர்களே, இன்று கூகுளை பற்றி சில அரிய தகவல்களை தெரிந்து கொள்வோம்
 
Google Doodle !

இந்த கூகுள் பிறந்த கதை மிகவும் சுவாரசியமானது. 1996 ஆம் ஆண்டு, லேரி பேஜ், செர்ஜி ப்ரின் என்ற இரண்டு ஸ்டான்போர்ட் பல்கலைகழக மாணவர்கள், தங்கள் பி.ஹெச்.டி பட்ட படிப்பிற்காக ஆராய்ச்சி தலைப்பாக இந்த தேடல் பொறி தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள். இவர்கள் முதலில் கோகோல்.காம் ( gogol.com ) என்ற பெயரை தான் தேர்ந்தெடுத்தார்கள். இந்த கோகோல் என்பதற்கு என்ன அர்த்தம் ? ஒன்று என்ற எண்ணை தொடர்ந்து நூறு பூஜ்யங்களை போட்டால் என்ன விடையாக வருமோ, அது தான் கோகோல். அதாவது, எண்ணிலடங்கா இணைய பக்கங்களை தேடும் தளம் என்ற எண்ணத்துடன் பெயர் சூட்டினார்கள். ஆனால் பதிவு செய்யும் பொழுது இவர்கள் பிழையாக கூகிள்.காம் ( google.com ) என்று பதிவு செய்து விட்டார்கள்.

Larry Page and Sergy Brin

1990-களில் இணைய உலகில் கோலோச்சிய ask.com என்ற தேடல்பொறியை சொந்தம் கொண்டாடிய எக்சைட் (Excite) என்ற நிறுவனத்தை அணுகி, கூகுளை ஒரு மில்லியன் டாலர்க்கு விற்க முயன்றனர். எக்சைட் நிறுவன தலைவரான, ஜார்ஜ் பெல் இவர்களை நிராகரித்தவுடன், மேலும் 2,50,000 டாலர் விலையை குறைத்து விற்க முயன்றனர். அதிலும் தோல்வியை தழுவியதால், தாங்களே அதை நடத்த முனைந்தனர்.

இன்று இந்த கூகிள் வலைதளத்திற்கு, நாள் ஒன்றுக்கு 620 மில்லியன் மக்கள் வருகிறார்கள். கூகுள் ப்ளெக்ஸ்என்ற தலைமை செயலகத்தில் 2668 பொறியாளர்கள் வேலை செய்கிறார்கள். நாள் ஒன்றுக்கு ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களை கை ஆளும் கூகிள் 24 பெட்டா பைட் அளவுக்கு தகவல்களை சேமிக்கிறது. 25000 இணைய பக்கங்களின் குறிப்புகளைக் கொண்டு தொடங்கப் பட்ட கூகிள், அசுர வளர்ச்சி அடைந்து தற்போது பல கோடிகளுக்கும் மேலான பக்கங்களின் சுட்டு வரிசை பதிவகமாக (INDEX) செயலாற்றுகிறது. தமிழ், இலத்தீன், உருது, க்ளிங்கோன் உள்ளிட்ட 88 உலக மொழிகளில் கூகுள் முகப்பு பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாசகர்கள் தங்கள் தாய் மொழியிலேயே தேடலைத் தொடரலாம் என்பது ஒரு வரப் பிரசாதம்.

Google Plex 

மற்றும் ஒரு விந்தையான தகவல். கூகுள் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வாடகைக்கு அமர்த்துகிறது என்று சொன்னால் நகைப்பீர்கள் தானே ? ஏன் எதற்கு என்ற கேள்விகள் நம் மனதை துளைக்கும் தானே ?

நண்பர்களே, இது நகைப்பதற்குரிய விஷயம் அன்று. கூகிள் ப்ளெக்ஸ் தலைமையக தோட்டத்தில் உள்ள புல் மற்றும் களைகளை அகற்ற நவீன கருவிகளை இவர்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக, அதற்காகும் செலவுகளை கணிசமாக குறைக்கும் விதமாக "கலிஃபோர்னியா க்ரேசிங்" எனும் நிறுவனத்திடம் இருந்து 200 ஆடுகள், ஒரு மேய்ப்பர் மற்றும் தோட்ட முகப்புகளை பராமரிக்க ஒரு நபரை வாடகைக்கு அமர்த்துகிறார்கள். "எங்கள் தோட்டத்தில் கருவிகளின் இரைச்சலை விட இந்த ஆடுகள் மேயும் காட்சி மிகவும் அழகு" என்பது கூகிளின் கூற்று.

California Grazing Sheep On Google Plex lawns
நிலவில் லேசர் கதிர்களின் மூலம் கூகுள் என்று அச்சிட வேண்டும் என்ற இவர்களின் அடுத்த செயல்திட்டம் நிறைவேற வாழ்த்துவோம் !





2 comments :

  1. நகைச்சுவையாக பலர் கூறி கேட்டதுண்டு

    " நெல்லைக்கே அல்வாவா ? பாகவதருக்கே ராகமா ? " என்று !!

    உலகம் முழுதும் தேடுதலின் உச்சக்கட்ட தளமான கூகிளை பற்றி இப்படி ஒரு தேடல் கட்டுரையை படிக்கும் பொழுது, "கூகிளுக்கே ஒரு ஆராய்ச்சியா" என வியக்க தோன்றுகிறது.

    இனி தமிழ் ப்ளாகுகளில் "அரிதும் அறிவோம்" தளத்தை "எங்கள் கூகிள்" என்றும், இதன் ஆசிரியரை "தேடல் அரசி" என்றும் தாராளமாய் அழைக்கலாம்.

    ReplyDelete
  2. அருமயான பதிவு, இதுவரை நான் படித்திராத புதிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி..தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger