புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Thursday, 1 May 2014

வா முனிம்மா வா.....!!!!

மிகப் பெரிய புகழ் பெற்ற மருத்துவமனை அது. ஒரு குறிப்பிட்ட ICU பிரிவு படுக்கையில் அனுமதிக்கப்படும் எல்லா நோயாளிகளும், சரியாக ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை 11 மணிக்கு சொல்லி வைத்தது போல் மரணம் அடைந்தார்கள். புற்று நோயாக இருந்தாலும், பக்கவாதமாக இருந்தாலும், எந்த நோயுடன் அந்த படுக்கையில் அனுமதிக்கப்பட்டாலும் அனைவரும் அதே நேரம், அதே கிழமையில் இறந்து போனார்கள்.

இதைக் கண்ட மருத்துவர்கள் இது எதேனும் பேய் பிசாசு அல்லது நமக்கும் மீறிய சக்தியால் தான்  நடக்கின்றது என்ற முடிவுக்கே தள்ளப்பட்டார்கள். 


சொல்லிவைத்தாற்போல் தொடர்ச்சியாக பத்து மரணங்கள் அதே படுக்கையில் அதே நேரத்தில் நிகழ்ந்து விட்டன. இதனால் பீதி அடைந்த மருத்துவர்கள் இதன் காரணத்தை ஆராய அடுத்த ஞாயிறு 11 மணிக்கு சில நிமிடங்கள் முன்னர் அந்த குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கவனிக்க தொடங்கினார்கள்.

நோயாளி அமைதியாக உறங்கி கொண்டு இருந்தார். அவர் உறக்கத்தை கலைக்காமல் ஒருவருக்கொருவர் செய்கைகளில் பேசிக்கொண்டு, நடக்கும் துர்மரணத்தை பற்றி ஆழ்ந்த சிந்தனையுடனும் கவலையுடனும் காணப்பட்டார்கள்.

மிகச்சரியாக 11 மணிக்கு அந்த அறைக்கு வந்த முனியம்மா ( பகுதி நேர துப்புரவு பணியாளர்) தன் முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு, படுக்கையின் அருகே உள்ள செயற்கை சுவாச இயந்திரத்தின் மின் இணைப்பை எடுத்து விட்டு, தன் செல்போனின் சார்ஜரை அந்த இணைப்பில் சொருகிவிட்டு மீண்டும் தன் துப்புரவு பணியை மும்முரமாக செய்ய தொடங்கினார்.

இதை கவனித்த அத்தனை மருத்துவர்களின் மயக்கத்தின் காரணத்தை சொல்லத்தான் வேண்டுமா நண்பர்களே !!!



மூட நம்பிக்கைகள் நம் சமூகத்தை தொன்றுதொட்டு பாதித்து கொண்டு இருக்கின்றன என்பதை நாம் நன்கு அறிவோம். நமக்கு மூத்தவர்களும், முன்னோர்களும் மட்டுமே இதற்கு பொறுப்பல்ல, ஏனென்றால் சமகாலத்திலும் ஆய்ந்து அறியாமல் பல விஷயங்களில் நாம் தவறான முடிவெடுக்கிறோம். இவ்வாறு ஆராயாமல் முடிவெடுத்து விட்டு பின்னர் அதற்காக வருத்தமும் அடைகிறோம். தீர ஆராயாமல் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதும் தவறான முடிவுகளாகவே இருக்கின்றன.


கல்வி தரும் சிந்தனையை விட பகுத்தறிவு தரும் செயல்பாடுகள் எப்போதுமே உயர்வுதான்.


2 comments :

  1. இங்கே படித்தவர்கள் பலருக்கே பகுத்தறிவு இல்லை, படிதர்வகள் பாமரனை விட இது போன்ற மூட நம்பிக்கையில் அதீத நம்பிக்கை வைத்து உள்ளான், இந்த நிலை மாறவேண்டும் மக்களுக்கு பகுத்தறிவு வருகிறதோ அன்று தான் மதம் இனம் ஜாதி கடந்து மனிதம் பழகக் கற்றுக்கொள்வான்......வழக்கம் போல் அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. ////மூட நம்பிக்கைகள் நம் சமூகத்தை தொன்றுதொட்டு பாதித்து கொண்டு இருக்கின்றன என்பதை நாம் நன்கு அறிவோம். நமக்கு மூத்தவர்களும், முன்னோர்களும் மட்டுமே இதற்கு பொறுப்பல்ல, ஏனென்றால் சமகாலத்திலும் ஆய்ந்து அறியாமல் பல விஷயங்களில் நாம் தவறான முடிவெடுக்கிறோம். இவ்வாறு ஆராயாமல் முடிவெடுத்து விட்டு பின்னர் அதற்காக வருத்தமும் அடைகிறோம். தீர ஆராயாமல் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதும் தவறான முடிவுகளாகவே இருக்கின்றன.
    கல்வி தரும் சிந்தனையை விட பகுத்தறிவு தரும் செயல்பாடுகள் எப்போதுமே உயர்வுதான்.////

    இது நம்பிக்கைக்கு மட்டுமேயான வார்த்தைகள் இல்லை... புகழ் என்ற மாய பிம்பமும் அப்படியே.. புகழ் அங்கீகாரம் அந்தஸ்து எல்லாமே ஒரு போதை.. அந்த போதை வெறும் ப்ளாக் Facebookஆல் மட்டும் வருவதில்லை.. அந்த போதையினால் இம்மியளவேனும் சமூகத்துக்கு பயன் உண்டா என ஆராந்து அறியாமல் பல விஷயங்களில் தவறாக நடக்கிறோம்... இவ்வாறு ஆறாயாமல் புகழ் போதையில் செயல்பட்டு பின்னர் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு, அதற்கு சப்பைக்கட்டு செய்ய நிறைய நிறைய பிரச்சினைகளை உறுவாக்குகிறோம்...

    கல்வி தரும் சிந்தனையை விட இந்த புகழ் போதை தரும் செயல்பாடுகள் எப்போதுமே ஆபத்து தான். :(((

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger