ஷங்கரின்
எந்திரன் படத்தில், ‘ ஒ பேபி ஒ பேபி, செந்தேனில் வசாபி’ என்று ஸ்டைலாக பாடுவார்
நம்ம சூப்பர் ஸ்டார். இந்த வசாபி (WASABI) என்பது என்ன ? வாங்க பார்க்கலாம் !
வசாபி என்பது ஒரு வகை செடியாகும். இந்த செடிகள் ஜப்பான், தாஸ்மானியா, ஹவாய் , ஒரேகான்
ஆகிய நாடுகளின் மழைப் பிரதேசங்களிலும் ஆற்றுப் படுகைகளிலும் பயிரிடப்படுகிறது. இந்தச்
செடியின் வேரானது மிகவும் சத்தானதால், உணவுகளில் துருவி பரிமாறப் படுகிறது. பார்பதற்கு
இஞ்சி போல் இருக்கும் இதன் நிறம் இளம் பச்சை ஆகும்.
முதன் முதலில் வசாபி செடியை, பத்தாம் நூற்றாண்டில் பயிரிட்டு
உலகுக்கு எடுத்துரைத்த பெருமையை ஜப்பான் நாடு தட்டிச் செல்கிறது. வசாபியை பயிரிட்டு
வளர்ப்பது மிக கடினமான செயல் மட்டும் அல்லாது, இதன் வேர்கள் முழுதாக வளர இரண்டு வருடங்கள் பிடிக்கும்
என்பதால், இவை மிக்க விலை மதிப்பு வாய்ந்தவை. ஒரு கிலோகிரம் வசாபி வேர்கள், நூறு டாலர்கள்
அல்லது ஐயாயிரம் இந்திய ரூபாய்கள் மதிப்புள்ளவை. இதை பெரும்பாலும் ஜப்பானிய சுஷி
மற்றும் சாலட்களில் பரிமாறுகிறார்கள்.
வசாபியின் முக்கிய குணம் அதன் காட்டமான தன்மை ஆகும். மிளகாய்
போல காரமாக இருக்கும் இதை , துருவிய பதினைந்து நிமிடத்திற்குள் உபயோகிக்கா
விட்டால், அதன் சுவைமணம் காற்றில் கரைந்து விடுமாம். ஆகவே , இதை பசை
போல அரைத்து, பற்பசை
போல ட்யுப்களில் பாதுகாக்கின்றனர். அல்லது , தேவைப்படும்
போது அவ்வப்போது துருவி பயன்படுத்துகிறார்கள். வாயில் வைத்தவுடன், இதன்
காட்டம் முதலில் மூச்சுகுழலில் பரவுவதால், கொஞ்சம்
அதிகம் இதை உட்கொண்டால் , கொடூரமான வலியை எற்படுத்துகிறது. ஆனாலும், மிளகாயின்
காரம் போல வசாபியின் காரம் நம் நாக்கில் தங்கு வதில்லை. கொஞ்சம் அதிகபடியான உணவு அல்லது
நீரை உட்கொண்டால் , இதன் காட்டம் உடனே குறைந்து விடுமாம்.
வசாபியின் வேர் மட்டும் அல்லாது, இலைகளையும் சாலட்களில் பயன்படுத்துகின்றனர்.
Wasabi Rhizomes |
இந்த வசாபி அனைத்து இந்திய வேர்களைப் போல மருத்துவ குணம் உடையது
ஆகும். கான்சர் செல்களை அழிப்பது, அலர்ஜி, ஆஸ்துமா, எலும்பு
நோய்களை மட்டுப்படுத்துவது, ரத்தம்
உரைதலை கட்டுபடுத்தி, பக்க வாதம் , நெஞ்சு
வலி ஆகியவை வராமல் தடுக்கிறது.
இதெல்லாம் இருக்கட்டும் நண்பர்களே, இப்போது நான் சொல்லப் போவது தான் வசாபியின் பெருமைக்கு
சான்று. பொதுவாக தீ பிடித்தால் ‘ஸ்மோக் அலாரம்’ அடித்து அலெர்ட் ஆகி எல்லோரும்
வெளியில் ஓடி தப்பிப்போம். ஆனால் காது கேளாதவர்கள் என்ன பண்ணுவார்கள் ? பாவம் ! விஞ்ஞானிகள்,
அவர்களுக்காக இந்த வசாபியை கொண்டு ஒரு புது வகையான அலாரம் கண்டுபிடித்து
இருக்கிறார்கள். தீ பிடித்ததும், வசாபி புகை அறைக்குள் தெளிப்பதை போன்ற ஒரு கருவியை
கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதனால் காது கேளாதவர்கள் நெடி தங்காமல் வெளியில் தப்பி
ஓடிச் செல்லும் இந்த அபூர்வ கண்டு பிடிப்பிற்காக, நோபல்
பரிசு பெற்று தந்துள்ளது வசாபி !
மிகவும் அருமையான பதிவு , வசாபி என்ற ஒன்று இருப்பதையே உங்கள் பதிவு பார்த்தவுடன் தான் தெரிந்தது, உங்கள் பதிவை பார்த்தவுடன் தான் வாசாபி பற்றியும் அதற்கு வேதியல் துறையில் வழங்கப்பட்ட நோபல் பரிசு பற்றிய மேலும் பல தகவல்களை படித்து அறிந்தேன். மிக்க நன்றி இது போன்ற மேலும் பல அரிய தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDelete