புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Tuesday, 18 March 2014

திருக்கோயில்களில் செய்யக்கூடாதவை


1)  தலையில் தொப்பி, முண்டாசு அணியக்கூடாது.

2)  கோயிலில் எத்தனை வாசல்கள் இருந்தாலும், ராஜகோபுரம் வழியாக செல்லுதலே சிறப்பு.

3)  விபூதி பிரசாதம் வாங்கும் பொழுது,  ஒரு கை மட்டும் நீட்டி வாங்கக் கூடாது.

4)  கண்ணாடி பார்த்தபடி திருநீறு பூசக்கூடாது.

5)  விளக்கில்லாத பொழுது இருட்டில் வணங்கக் கூடாது.

6)  கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக்கூடாது.

7)  பலி பீடத்திற்கு உள்ளே சந்நிதியில் மற்றவரை வணங்கக் கூடாது.

8)  தெய்வ வழிபாடு ஈர ஆடையுடனும், ஓராடையுடனும் செய்யக்கூடாது.

9)  நந்தி தேவருக்கும், சிவலிங்கதிற்க்கும் நடுவில் செல்லக்கூடாது.

10) தீபத்தை விக்கிரகத்திற்கு மிக அருகில் வைக்க கூடாது.







1 comment :

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger