நாவல் பழத்தின் நன்மைகள்
நாவல், பலம் வாய்ந்த ஒரு பெரிய மரவகையைச் சேர்ந்தது. இந்தியாவில், மராட்டிய மாநிலம், கர்நாடகா, ஆந்திரத்தின் ராயலசீமா பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இது ஈரப்பதம் மிக்க இடங்களான ஆற்றோரங்கள், கடற்கரை ஓரங்களில் நன்கு வளரும்.
நாவல் பழம் தளர்ச்சி அடைந்த நாடி நரம்புகளை ஊக்கப் படுத்தும். இதன் துவர்ப்பு ரத்தத்தை பெருக்கும். தாதுக்களை உரமாக்கும். குளிர்ச்சி தரும். சிறுநீரைப் பேருக்கும். முக்கியமாக, நாவல் கொட்டை நீரிழிவைப் போக்கும். இதயத்துக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும்.
ஆனால், நாவல் பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால் ஜலதோஷம், ஜன்னி வரும். அளவோடு சாப்பிட்டு நன்மை பெறலாம்.
Post a Comment