இப்போ பலாப்பழ சீசன். பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு கொட்டையை தூர எறியாதீர்கள். பலா கொட்டையில் புரதம் நிறைந்துள்ளது. அதை வீணாக்காமல் இவ்வாறு கத்தரிக்காயுடன் சேர்த்து வித்தியாசமாக சமைத்து பாருங்கள்... சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் மனதை அள்ளும். சுவையோ சுவை !
செய்முறை விளக்கம் :
1) பலாக்கொட்டையை படத்தில் இருப்பதைப் போல் நசுக்கி தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2) ஒரு இன்ச் இஞ்சித் துண்டு, 3 பல் பூண்டு, 3 கிராம்பு, சிறிது பட்டை – இவை நான்கையும் பசை போல அரைத்துக் கொள்ளவும்
3) அடுப்பில் எண்ணெய் காய வைத்து, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, சன்னமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள பசையை சேர்த்து கிளரவும்.
4) அடுத்து, நசுக்கிய பலாக்கொட்டை, நீளமாக நறுக்கிய கத்திரிக்காய், சேர்த்து கிளரவும்.
5) தேவையான அளவு மஞ்சள் தூள் , மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, அரை தம்ளர் நீர் விட்டு, குறைந்த தீயில் மூடி போட்டு வேக விடவும்.
6) வெந்தவுடன், மீதம் உள்ள நீரை காய விட்டு ( தேவை என்றால் நறுக்கிய தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்) நன்கு சுருண்டு வரும்போது, மல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
அடுத்து என்ன ? சாப்பிட வேண்டியது தானே ? சாப்பிட்டு விட்டு கருத்துக்களைச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்
Paaaathaale pasiyai thoondi saapda aasai yaa iruku
ReplyDelete