புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Monday, 24 March 2014

இப்படிச் செய்வதால் நம் உடல் எடை குறையுமா என்ன ?


நாம் அனைவரும் செய்ய விரும்பும் இந்தச் செயலானது, ஒரு விதமான உடற்பயிற்சி என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். ஒரு நிமிடம் இந்த செயலை செய்வதால், நம் உடலில் இருபத்தி ஆறு காலோரிகள் எரிந்து ஆற்றல் வெளிப்படுகிறதாம். அதாவது , ஒரு மணி நேரம் இதை செய்வது, உடற்பயிற்சி கூடத்தில் ஒரு மணி நேரம் கடுமையாக பயிற்சி செய்வதற்கு இணையாகும் என்று மருத்துவர்கள் கணித்து இருக்கிறார்கள். அது சரி, நோகாமல் நோன்பு கும்பிடுகிற இந்த வேலை என்னவாக இருக்கும் என்று தெரியுமா ?

கலைஞானி கமல்ஹாசன் இந்த செயலை தன்னுடைய பல படங்களில் அரங்கேற்றி உள்ளார். 

“கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காய வில்லையே”.

ஆமாம் நண்பர்களே, முத்தம் கொடுத்தலை பற்றி தான் இங்கே தெரிந்து கொள்ளப் போகிறோம். ஒரு நிமிடம் முத்தம் கொடுத்தால் இருபத்தி ஆறு காலோரிகள் எரிந்து ஆற்றல் வெளிப்படுவது உண்மையாகும். முத்தம் என்றாலே நம் நாட்டில் ஆண் பெண் காதல் செய்யவதற்கு மட்டுமே என்று  நினைக்கிறோம். அனால் முத்தம் என்பது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு கருவி ஆகும். தாய் மனதோடு முத்தமிடுவது, குழந்தைகள் முத்தமிடுவது, பக்தன் தெய்வத்தை முத்தமிடுவது, அமைதிக்கான முத்தம், பாசத்தில் கொடுக்கப்படும் முத்தம்,  நட்புக்கான முத்தம், மரியாதை நிமித்தம் கொடுக்கும் முத்தம் என்று முத்தம் பல பரிணாமங்களில் உள்ளது. 

தாய் மண்ணே வணக்கம் !
சாதாரணமாக உதட்டைக் குவித்து கொடுக்கப்படும் முத்தம், இரண்டு தசைகளுக்கு வேலை தருகிறது என்றால், ‘பிரெஞ்சு கிஸ்’ எனப்படும் முத்தம் முப்பத்தி நான்கு தசைகளுக்கு வேலை கொடுக்கிறது. 

இதெல்லாம் இருக்கட்டும், முத்தம் கொடுப்பதால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆரம்பத்தில் சொன்னதைப் போல உடற்பயிற்சியாக மட்டும் அல்லாது, முத்தம் பரிமாறுவதால் மன அழுத்தம் குறைகிறது.  கெட்ட கொழுப்பு என்னும் ‘கொலேஸ்ட்ரால்’ கட்டுப்படுகிறது. முத்தம் பரிமாறும்போது எச்சில் வேகமாகப் பாய்வதால், பற்களில் ‘ப்ளேக்’ (PLAGUE) எனப்படும் பற்காரைகள் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவ ஆதாயம் இருந்தாலும்,  நம் துணையை முத்தமிடும் போது,  நூறு லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாற்றம் நடக்கின்றது. இதனால், சில வியாதிகள் தொத்தும் அபாயமும் உள்ளது. முக்கியமாக இரத்தக் கசிவு கொண்ட ஈறுகள் இருந்தால்,  உயிர்கொல்லியான எய்ட்ஸ் நோய் (AIDS) கூட பரவும் வாய்ப்புள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். 

கன்னத்தில் முத்தமிட்டால் ...... 
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி, சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுகிறது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?


2 comments :

  1. எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விடயத்தை பற்றிய பதிவு,ஏன் அனைவர்க்கும் பிடித்தமானது செய்ய துடிப்பது,வெறும் காமத்தோடு அல்லாமல் காதல் காமம் இரண்டையும் கலந்து கொடுத்தால் அன்பும் வெளிப்படும்,உடல் எடையும் மெலிந்திடும்

    ReplyDelete
  2. முத்தங்களை..வெறும் .முனகல்களாக..மட்டுமே தெரிய படுத்திய பல பதிவுகளுக்கு மத்தியில்...ஆரோக்கியத்தின்..ஒரு அம்சமாக தெளிவுபடுத்தியமைக்கு வாழ்த்துக்கள்...உங்கள் எழுத்து நடையால் பாக்யராஜின் வசனங்களை...கூட...பரமஹம்சர்..வாக்குகளாக...மாற்றிவிடுவீர்கள் என்று நினைக்கிறன்.நன்றி

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger