தந்தை பெரியாரின் தனித்துவம்
தமிழ் மக்கள் அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர் தந்தை பெரியார் ஈ.வே.ரா என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவருக்கு இருந்த பல்வேறு தனித்தன்மைகளில் நம் மனதை கவர்ந்த ஒரு கொள்கையை இங்கே பகிர்கிறோம்.
"ஒழுக்கமாய், நாணயமாய், சுயநலமில்லாமல் உழைப்பதன் மூலம், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது வெற்றிக்கு வழியே ஆகும்."
"விதியை நம்பி மதியை இழக்காதே"
இத்தகைய பொன்மொழிகளை மக்களுக்கு அறிவுறுத்தியதோடு நில்லாமல், அவ்வாறே வாழ்ந்து காட்டியவர் இவர்.
தந்தை பெரியார் மிகவும் சிக்கனமானவர். ஆடம்பரங்கள்
அவருக்குப் பிடிக்காது. அதனால், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் மாலை
மரியாதைகளை வேண்டாம் என்று கூறிவிடுவார்.
ஆனால், தன் எடைக்கு எடை தேவையான பொருட்களை பெற்றுக் கொள்வார். அவ்வாறு அவர் பல ஊர்களில் பெற்றுக் கொண்ட பொருட்களின் பட்டியல் இதோ !
காஞ்சீபுரம் >>> நெல்
கோயம்பத்தூர் >>> தேங்காய்
குளித்தலை >>> பெட்ரோல்
குடியாத்தம் >>> கைத்தறி ஆடைகள்
சிதம்பரம் >>> காபிக் கொட்டை
சிவகங்கை >>> உப்பு
செங்கம் >>> கிச்சிலி சம்பா அரிசி
மதுரை >>> வெல்லம்
திருச்சி >>> பால்
தஞ்சாவூர் >>> வெள்ளிக் காசுகள்
வட ஆற்காடு >>> வாழைப் பழங்கள்
பண்ருட்டி >>> பிஸ்கட்
பாபநாசம் >>> கோதுமை, அரிசி, சோளம், கேழ்வரகு, சர்க்கரை போன்ற பல வகைப் பொருட்கள்
பெங்களூர் >>> காய்கறிகள்
பெரம்பலூர் >>> வெங்காயம்
இதன் மூலம் என்ன தெரிகிறது ?
உழைக்கும் வர்க்க மக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்துக் கொண்டு, தனக்கான தேவைகளை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்ட பண்பு நிறைந்தவர். தந்தை பெரியாரின் பரந்த மனமும் சேவை குணமும் இதிலிருந்தே விளங்குகிறதல்லவா ?
Post a Comment