துரித உணவை அதிகம் விரும்பி சுவைப்பதில் அடிமை
பட்டிருக்கும் தலைமுறையை சேர்ந்தவர்கள் நாம் எல்லோரும். இதனால் பல நோய்கள்
ஏற்பட்டாலும், ஞாபகமறதி நோயும் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்ற அதிர்ச்சிகரமான
தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதனால் வளரும் குழந்தைகள் பாதிக்கப்படுமே ? இது
எப்படி சாத்தியம் ? அற்புதமாக சுவைக்கும் உணவு, எதனால் நோயை உண்டாக்குகிறது ??
இந்த கேள்விகளுக்கு விடை இதோ !
எவை தீங்கு விளைவிப்பவை ?
துரித உணவுகளில் நம் மனதை கவர்ந்தது ஃப்ரைட் சிக்கன் என்னும் வறுத்த கோழி வகை. இதை விரும்பி உண்ணும் நாம், இதனால் நம்
உடலுக்கு ஏற்படும் உபாதைகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியம். இது
‘பிரவுனிங்’ என்ற முறையில் தயார் செய்த உணவு ஆகும். இந்த சமையல் முறையே தீங்கு
விளைவிப்பதாகும்.
பிரவுனிங் முறை என்றால் என்ன ?
பிரவுனிங் என்றால். கோழி இறைச்சியில் பல்வேறு
மசாலாக்களை தடவி, அதில் கொஞ்சம் சர்க்கரையையும் தடவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி
பொரிப்பது ஆகும். இப்படி செய்யும் போது அந்த இறைச்சியில் உள்ள கொழுப்பும், அதில் தடவப்பட்டிருக்கும்
சர்க்கரையும் சேர்ந்து, இறைச்சியை ஒரு விதான பழுப்பு நிறமாக மாற்றும். இந்த
பழுப்பு நிறமே கூடுதல் சுவை அளிக்கக் கூடியது.
விளையும் வேதியியல் மாற்றம் :
இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும்
போது, இறைச்சியில் இருக்கும் புரதச்சத்து அல்லது கொழுப்பு, சர்க்கரையுடன் சேர்ந்து
எதிர் வினையாற்றி ‘அட்வான்ஸ்ட் க்ளைகேஷன் எண்ட்’ (Advanced Glycation End)
அல்லது ஏ.ஜி.இ. என்ற வேதியியல் மாற்றம் உண்டாகிறது. இந்த ஏ.ஜி.இ. மாற்றம்
ஏற்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் தான் பலவகையான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக
மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
குறிப்பாக சர்க்கரை நோய் உருவாவதற்கு முக்கிய காரணமான இந்த ஏ.ஜி.இ., தற்போது டிமென்ஷியா என்னும் ஞாபக சக்தி குறையையும்
அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.
தற்போதைய அதிவேக பாஸ்ட் பூட் காலச்சார வாழ்க்கைக்கு அடிமை பட்டு இருக்கும் அனைவர்க்கும் அவசியமான பதிவு அனைவரும் தெரிந்துகொண்டு,இது போன்று துரித உணவுகளை தவிர்த்து உடல் நலத்தை பேண வேண்டும்.....உங்களின் எழுத்துப்பணி மேலும் தொடரட்டும்
ReplyDelete