புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Saturday 22 March 2014

தாய் தந்தை என்ற சொற்களுக்கு விளக்கம் தரும் ஒரே மொழி எது ?


உலகில் பத்தாயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் மொழிகள் இருக்கிறது என்று மேதைகள் கணித்து இருக்கிறார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் மட்டுமே, எழுத்துருவுடன் கணிசமாக புழங்கப்பட்டு வருகிறது. பல மொழிகள் வெறும் பேச்சு வழக்கிலும், மேலும் சில மொழிகள், இறந்து போன மொழிகள் ( Extinct Languages ) என்று குறிப்பிடப்படுகின்றது.

இன்றளவும் உயிரோட்டமுள்ள மொழியாக கருதப்படும் நம் தமிழ் மொழியில் தான், கி.மு. முதலாம் நூற்றாண்டில் உலகின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம்இயற்றப்பெற்றது. திராவிட மொழியான தமிழ்மொழி, இந்திய மொழிகளிலேயே மிக தொன்மையானது என்று 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசால் கௌரவிக்கப் பட்டது.



இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும், தமிழ் மொழியின் தனித் தன்மைக்குச் சான்றாக விளங்குவது, அதன் பல்வேறு வட்டார மொழிகளும் அவை வழங்கும் அழகியலும் ஆகும்.

தமிழ் மொழி என்பது பொதுவாக இருந்தாலும், நம் தமிழ் நாட்டிலேயே வேறு வேறு பகுதிகளில் உச்சரிக்கப்படும் தமிழை தனித்தனியாக பாகுபடுத்தி இருக்கிறார்கள். சென்னைத தமிழ் அல்லது மதராஸ் பாஷை, கொங்கு தமிழ், தஞ்சைத் தமிழ், நெல்லைத் தமிழ்குமரித் தமிழ், திருச்சித் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், திருகோணமலைத் தமிழ், மட்டகளப்புத் தமிழ், மலேசிய தமிழ் , ஐயர் தமிழ், ஐயங்கார் தமிழ், பெங்களூரு தமிழ் என்ற பலவிதமான தமிழ் இருக்கிறது.

எடுத்துக்காட்டாக :
இங்கண் இ + கண் = இவ்விடம் ( இது சங்கத் தமிழ் )

இது எவ்வாறு மருவி விட்டது என்பதை பட்டியல் இட்டுள்ளோம் :
இங்கு கொங்கு தமிழ்
இங்க தஞ்சை தமிழ்
இங்கை இலங்கைத் தமிழ்
இங்கன நெல்லைத் தமிழ்
இங்குட்டு மதுரைத் தமிழ்

சரி, அதெல்லாம் இருக்கட்டும். தாய் தந்தை - இவற்றின் பெயர் காரணம் என்ன ? தாய் தந்தை என்ற சொற்களுக்கு, ஒரு அற்புதமான பெருந்தன்மையான விளக்கம் கொடுப்பது, உலகிலேயே நம் தமிழ் மொழி மட்டும் தான்.

தாய் = குழந்தையை தாவி எடுத்து தழுவுபவள்
தந்தை = குழந்தையை தந்தவன் = தந்த + தலைவன் (ஐயன்) = தந்த + ஐ

என்னே நம் தமிழ் மொழியின் வளமை! செழுமை!! தொன்மை!!! பெருமை!!!!


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் 




இந்தப் பதிவின் காணொளியைக் காண :




2 comments :

  1. ஆஹா... அருமை... இதுவரை இந்த விளக்கம் கேள்விபட்டதில்லை... நன்றி...

    மேலும் ஒரு தகவல்...

    குழந்தை முதன்முதலில் சொல்லும் வார்த்தை “அம்மா”...... இந்த அம்மா என்ற வார்த்தைக்கு... i mean it.. வார்த்தைக்கு உள்ள சிறப்பம்சம் என்னவென்றால்...

    அ - உயிர் எழுத்து
    ம் - மெய் எழுத்து
    மா - உயிர்மெய் எழுத்து

    அதாவது... உயிர் தான் பிரதானம்... அந்த உயிர் மெய் எனப்படும் உடலுடன் சேர்கிறது... ஆக ஒரு மனிதன் என்பவன் உயிர்மெய் ஆனவன்...

    தமிழ் எழுத்துக்களில் முதன்மை - உயிர்.
    அடுத்து மெய்... இந்த உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது உயிர்மெய்...

    என்னே தமிழின் சிறப்பு....

    ReplyDelete
  2. தாய் தந்தை என்ற சொல்லுக்கு அருமையான விளக்கம், தமிழ் மொழியின் சுவையை பற்றிய அருமையான விளக்கம்,உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger