புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Thursday 20 March 2014

அமெரிக்காவை கொலம்பஸ் தான் கண்டு பிடித்தாரா ?

அமெரிக்காவை கண்டுபிடித்த பெருமை கொலம்பஸை சார்ந்தாலும், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆராய்ச்சி மேதைகள் அந்த கருத்தை, ‘இது பொய்யானது’ என்று மறுத்தார்கள். ஏன் இந்த கருத்து வேறுபாடு ? அமெரிக்காவிற்கும் கொலம்பசிற்கும் என்ன சம்பந்தம் ? வாருங்கள் பார்க்கலாம்.

கொலம்பஸ் ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மாலுமி ஆவார். இத்தாலி நாட்டில் உள்ள ஜெனோவா என்ற பகுதியில் பிறந்த இவர், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒரு மேதை இல்லை. மூட நம்பிக்கைக்கைகளில் ஊறி திளைத்த இவர், உலகம் வெகு சீக்கிரம் அழியும் என்பதை நம்பினார்.


க்காலத்தில் ஐரோப்பர்கள் ஆசியாவை அடைய வேண்டும் என்றால், மிக பெரிய கண்டமான ஆப்பிரிக்காவை சுற்றி தான் போக வேண்டும். ஆனால் ஐரோப்பாவில் இருந்து வடக்கு நோக்கி பயணம் செய்து ஆசியாவையும் இந்தியாவையும் அடையலாம் என்று கணக்கு போட்ட கொலம்பஸ், போர்ச்சுகல் அரசரிடம் கப்பல் மற்றும் வழி செலவுக்கு வேண்டினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அங்கே நிராகரிக்கப்பட்டு ஸ்பெயின் அரசரிடம் சென்று உதவி கேட்டார். ஆறு ஆண்டுகள் காத்திருந்து பார்த்து விட்டு பிரெஞ்சு அரசரிடம் செல்லும் தருவாயில், ஸ்பெயின் அரசு அவருக்கு உதவி அளித்தது. 

அரசு கொடுத்த நினா, பிண்டோ, சாண்டா மரியா என்ற மூன்று கப்பல்களில், 1492 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள், வடக்கு நோக்கி பயணத்தை தொடங்கிய கொலம்பஸ், அக்டோபர் இரண்டாம் நாள், முதல் கரையைக் கண்டுசண் சால்வடோர்’ என்ற கரீபிய தீவை அடைந்தார். கியுபா, ஹிஸ்பானியோலா,இலா நவிடாத் ஆகிய தீவுகளை கண்டு பிடித்தாலும் , ஆசியாவில் உள்ள இந்தியாவை அடையும் அவர் நோக்கம் ஈடேறவில்லை என்பதே உண்மை.

அவருடைய இரண்டு கப்பல்கள் தரை தட்டியதால் ஸ்பெயினுக்கு திரும்பி சென் இவர், புது கப்பல்களில் வந்து அந்த தீவுகளை கைப்பற்றி ஸ்பெயின் ஆட்சியை அங்கு நிலைநாட்டினார். இவர் ஒரு சிறந்த மாலுமி ஆனாலும் மிக மோசமான ஆட்சியாளர் ஆவார். ஸ்பெயின் இவருக்கு கொடுத்த ஆட்சி பொறுப்பை சரியாக நிர்வாகம் செய்யாமல், ஊழல் கேளிக்கைகளில் கழித்ததால், பிற்காலத்தில் அந்த தீவு மக்களாலேயே கைது செய்யபட்டார்.


உண்மை என்னவென்றால், கொலம்பஸ் அமெரிக்காவை அடையவே இல்லை. அவர் பஹாமாஸ் தீவுக்கூட்டத்தை ஆசியா என்று நினைத்து அந்த தீவு மக்களை இந்தியர்கள் எனத் தன் பயணக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் அடுத்து மேற்கொண்ட பிரயாணத்தில் மேலும் தெற்கே சென்று, தென் அமெரிக்காவில் கால் பதித்தார். பிற்காலத்தில் ஆராய்ச்சி மேதைகள் பலர், ‘கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்ற கருத்து தவறானது. ஏனென்றால், அந்த நாட்டில் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து நாகரிகங்களை உருவாக்கி உள்ளனர். இவர் கண்டு பிடிப்பதற்கு முன்னரே, பல ஐரோப்பர்கள் அந்த நாட்டை அடைந்து வணிகம் மேற்கொண்டு உள்ளனர்’ என்று வாதிடுகின்றனர்.

கொலம்பஸ் ஒரு வரலாற்று வீரன் இல்லாவிட்டாலும் , இன்றளவும் அமெரிக்காவில் கொலம்பஸ் டே கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது !




இப்பதிவின் காணொளியைக் காண :



1 comment :

  1. நல்ல தகவல்கள், நான் எப்பொழுதோ படித்த ஒரு செய்தியை பகிர்கிறேன், கொலம்பஸ் கரீபியன் தீவுகளை தான் கண்டுபிடித்தார் என்றும் அது இந்தியாவின் ஒரு பகுதி என்று அவர் சொனதால் தான் அந்த இடத்திற்கு மேற்கு இந்திய தீவுகள் என்று பெயர் வந்ததாகவும் படித்து இருக்கின்றேன், அமெரிக்கவை கண்டு பிடித்தவர் அமெரிகோ வெஸ்புகி என்பவர் தான் என்றும் எங்கோ படித்த ஞாயபகம்

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger