புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Friday 21 March 2014

மிருகமானாலும் தாய்மை மிருதுவானது.


தாய்மை என்பதே மேன்மையான ஒரு விடயம் தான். மிருகங்களும் அதற்கு விதி விலக்கல்ல. ஒரு புலி எவ்வாறு குட்டிகளை ஈன்று வளர்க்கிறது என்பதை இன்று தெரிந்து கொள்வோமா ?

புலிகள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கருவுறும். கருவை சுமக்கும் காலம் மூன்று மாதங்களே ஆகும். புலிகள் பொதுவாகவே அமைதியையும்  இருட்டையும் நாடுபவை. தாய்மையடைந்த புலி இருட்டான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே இரவில்தான் குட்டி போடும். மூன்று முதல் ஐந்து குட்டிகள் வரை போடும். ஒவ்வொரு குட்டி போட்டதும் அதன் தொப்புள் கொடியை நீக்கித் தின்றுவிட்டு குட்டியை சுத்தப்படுத்திவிட்டே அடுத்த குட்டியை போடும். இப்படி பதினைந்து முதல் இருபது நிமிஷம் இடைவெளியில் ஒவ்வொரு குட்டியாகப் போடும். 

ஒரு குட்டி பிறந்தவுடன், தாய் புலி அதனை நக்கி சுத்தப்படுத்துவது ஏன் தெரியுமா ?? புலிகளின் உமிழ்நீரில் இயற்கையாகவே கிருமிநாசினி உண்டு. ஆகவே அடி பட்டாலோ, நோய் வாய் பட்டாலோ, தன் குட்டிகளை நக்கியே நோயை குணப் படுத்திக் கொள்ளும் வல்லமை வாய்ந்தது.   

பிறந்ததுமே குட்டிகள் கத்தத் தொடங்கிவிடும். குட்டி பிறக்கும் போது ஒரு கிலோ முதல் ஒன்றே முக்கால் கிலோ வரை எடை இருக்கும். கடைசி குட்டி மட்டும் பலகீனமாக இருக்கும். குட்டிகள் எட்டு நாள் கழித்தே கண் திறக்கும். குட்டிகளுக்கு தாய் நாற்பத்தொன்பது நாள் பாலூட்டும். அதன் பிறகு பலகீனமான குட்டியை வாயில் கவ்வியபடி மற்ற குட்டிகளை வேட்டைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லும். 

குட்டிகளில் ஒன்று மட்டும் பலம் வாய்ந்த புலியாக வளரும். தாய் புலி ஈன்ற குட்டிகளில் பாதி குட்டிகள் இரண்டு வருடம் வரை தாக்குப் பிடிப்பதே கடினம். பிற மிருகங்களுக்கு உணவாகவோ, தட்ப வெப்ப சூழ்நிலையை தாக்கு பிடிக்க முடியாமலோ, விபத்திலோ மரித்துப் போகும்.




Post a Comment

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger