புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Monday 24 March 2014

மிருகங்களுக்கும் ரத்த வகைகள் உள்ளனவா ?



மனிதர்களுக்கு நான்கு ரத்த வகைகள் (A, B, AB, O) உள்ளன என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அறுவை சிகிச்சைகளின் போது மனிதர்களுக்கு ஏன் ஒரே வகை ரத்தம் ஏற்ற வேண்டும் என்று தெரியுமா ? மனித ரத்தத்தில் பிறபொருள் எதிரிகள் (Anti Bodies) உள்ளன. பிறிதொரு வகை ரத்தம் ஏற்றப்படும் போது, இந்த பிறபொருள் எதிரிகள் தூண்டப்பட்டு எதிர்வினை ஏற்படுகிறது. இது சில சமயம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகையால், ரத்த வங்கிகளில் ரத்ததானம் செய்யும் போது ரத்த வகைகளின் படி தனித்தனியாக சேமித்து வைக்கின்றனர்.  


நாய்களுக்கு 13 ரத்த வகைகள் இருந்தாலும், 8 வகைகளே அடிப்படை ஆகும். அவை DEA ( DOG ERYTHROCYTE ANTIGENS ) என்று பெயரிடப்பட்டு DEA 1 முதல் DEA 8 வரை எண்களால் பிரிக்கப் பட்டுள்ளது. நாய்கள் ரத்தத்தில் பிறபொருள் எதிரிகள் இல்லாததால், அனைத்து ரத்த வகைகளும் ஒத்துப் போகின்றன. சில கால்நடை மருத்துவ மனைகளில், ரத்த தானம் செய்வதற்காகவே சில நாய்களை தனியாக வளர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பூனைகள் மனிதர்களைப் போல. A, B மற்றும் AB என்று 3 அடிப்படை ரத்த வகைகளைக் கொண்ட பூனைகள், அதே வகை ரத்ததை மட்டுமே ஏற்கிறது.

குதிரைகளிடம் 7 அடிப்படை ரத்த வகைகளைக் காணலாம். அவை A, C, D, K, P, Q, U ஆகும். இதை தவிர எட்டாவதாக  T வகை ரத்தத்தை கண்டு பிடித்து உள்ளனர். இந்த வகை ரத்தம் ஆராய்சிகளுக்கு மட்டுமே உதவுகிறது.


சரி நண்பர்களே, பசு மாடுகளுக்கு எத்தனை ரத்தப் பிரிவுகள் என்பது உங்களுக்கு தெரியுமா ?? 8 அடிப்படை ரத்தப் பிரிவுகள் இருந்தாலும், 800 க்கும் மேற்பட்ட ரத்த வகைகளை பசுக்களிடம் கணித்து உள்ளனர். உலகிலேயே மிகவும் சிக்கலான ரத்தவகை அமைப்பைக் கொண்டவை பசுக்கள் தான் என்பது மருத்துவர்கள் கருத்து.

2 comments :

  1. மிகவும் பயனுள்ள அறிவியல் தகவல்கள், இது போல் மேலும் பல அறிவியல் சார்ந்த தகவல்களும் தினம் ஒரு பதிவு என பகிருங்கள், பல தகவல்களை எங்களுக்கு வழங்குங்க

    ReplyDelete
  2. அப்போ..மனுசங்கள விட ..மாடுகளைதான்........பத்திரமா பார்த்துக்கணும் ........தகவலுக்கு நன்றி..

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger