புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Wednesday 26 March 2014

பிலிப்பைன்ஸ் என்ற பெயர் எதனால் வந்தது என்று தெரியுமா ?


போர்சுகீசியரான பெர்டினன்ட் மெகல்லன் ( Ferdinand Magellan ) என்பவர், போர்சிகீசிய கடற்படையில் சேர ஆசைப்பட்டு விண்ணப்பித்தார். ஆனால், அரசர் இமானுவேல் ( Immanuel ) அதை நிராகரித்து விட்டார். 


அந்தக் கோபத்தில் நாட்டை விட்டு வெளியேறி, ஸ்பெயினில் குடியேறினார் பெர்டினன்ட் மெகல்லன். ஸ்பெயின் அரசனின் உதவியோடு 1519 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள், மெகல்லனும் அவனுடைய 270 சகாக்களும் ஸ்பெயினிலிருந்து ட்ரிடினினாட், கொன்செப்சியன், சான் அன்டோனியோ, விக்டோரியா, சன்டியாகோ ஆகிய 5 சிறிய படகுகளில் உலகினைச் சுற்றப் புறப்பட்டனர். கொலம்பஸ்ஸைப் போல புதிய நாடுகளை கண்டறிவதே இந்த கடற் பயணத்தின் நோக்கமாக இருந்தது. 

1521 ஆம் ஆண்டு மார்ச் மாதம்.  தற்போது பிலிப்பைன்ஸ் என்ற அழைக்கப்படும் தீவின் ஒரு பகுதியான 'மெகல்லன் ஜலசந்தி'யை ( Strait Of Magellan ) அடைந்தனர். பிலிப்பைன்ஸ் தீவில் காலடி வைத்த முதல் ஐரோப்பியன் மெகல்லன் தான். அந்த நாட்டை தனக்கு உதவிய ஸ்பெயின் நாட்டு மன்னரின் ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முற்பட்டான். அப்போது, அந்த தீவில் வசித்த மக்களுடன் ஏற்பட்ட கைகலப்பில், ஒரு மூங்கில் ஈட்டி குத்தியதால் தன் நாற்பத்தி ஓராவது அகவையில் மரணத்தைத் தழுவினான்.  பசிபிக் பெருங்கடலில் பிரயாணம் செய்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையும் மெகல்லனைச் சேரும். 




அதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1542 ஆம் ஆண்டு ஸ்பெயினில் இருந்து வந்த  ருய் லோபெஸ் டி வில்லலோபோஸ் ( Ruy López de Villalobos )  என்பவர், பலத் தீவுகளைக் கொண்டு ஒரு பெரிய தீவுக்கூட்டமாக விளங்கும் அந்தப் பகுதிக்கு,  தனது மன்னன் பில்லிப் II (King Philip II)வை கௌரவபடுத்தும் விதமாக,  பிலிப்பைன்ஸ் தீவுகள் என்றுப் பெயரிட்டார்.


2 comments :

  1. நல்ல பயனுள்ள தகவல்கள், தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. நல்ல தகவல்... பதிவிற்கு நன்றி .....இதே போன்று நம் இந்தியாவில் ஏதேனும்.தகவல்கள் இருந்தால் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது...வாழ்த்துக்கள்..

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger